ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகன் இருவரும் ஒரே நேரத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். லட்சுமி லஹரி என்பவர் திருமணத்திற்கு முன்பே தனது படிப்பை பாதியிலேயே நிறுத்தியிருந்தார். ஆனால், கல்வி மீது கொண்ட ஈடுபாட்டினால் தனது மகன் சரண் விஜய்யுடன் சேர்ந்து தேர்வு எழுத முடிவு செய்தார்.
தற்போது வெளியான தேர்வு முடிவுகளில், தாய் லட்சுமி லஹரியும், மகன் சரண் விஜய்யும் ஒரு சேர தேர்ச்சி பெற்று ஊர் மக்களையே ஆச்சரியப்பட வைத்துள்ளனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை அறிந்த குடும்பத்தினர், ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள், கல்வியில் சாதிக்க வயது தடையல்ல என்று நிரூபித்த தாய்க்கும் மகனுக்கும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
