“கல்வி ஒன்றே அழியாத சொத்து” என்ற தமிழக முதல்வர் முழக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், திமுக மாணவரணி இப்போது ஒரு மெகா களப்பணியைத் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 500 மாணவர்கள் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டு, ‘தமிழ் மாணவர் மன்றம்’ மூலமாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வீரமணி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ‘நான் முதல்வன்’, ‘உயர்வுக்குப் படி’, ‘தமிழ் புதல்வன்’, ‘புதுமைப் பெண்’ மற்றும் ‘தோழி விடுதி’ போன்ற தமிழக அரசின் மகத்தான திட்டங்களை அடித்தட்டு மாணவர்களிடமும் கொண்டு சேர்ப்பதே இவர்களின் முக்கியப் பணி.
இந்தத் திட்டங்களுக்கு மாணவர்கள் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும், அதன் மூலம் கிடைக்கும் கல்வி மற்றும் பொருளாதாரப் பலன்கள் என்ன என்பதை இந்த 500 நிர்வாகிகளும் மாணவர்களிடம் நேரடியாகச் சென்று விளக்குவார்கள். தமிழகத்தின் எதிர்காலத் தூண்களான மாணவர்களின் கல்வி கட்டமைப்பைச் சீரமைக்கவும், வலுப்படுத்தவும் முதல்வர் ஸ்டாலின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் கல்விப் புரட்சியை ஏற்படுத்த திமுக மாணவரணி தற்போது முழு வீச்சில் களம் இறங்கியுள்ளது.
