மும்பையின் போரிவலி பகுதியில் ஒரு பெண் மற்றும் அவரது தாயாரை, அந்த பெண்ணின் மைத்துனரே கணவரின் சகோதரர் கொடூரமாக தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அந்த நபர் பெண்களை தரதரவென இழுத்து, மிக மோசமான முறையில் கைகளாலும் கால்களாலும் சரமாரியாகத் தாக்குவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக இந்த வன்முறை நிகழ்ந்ததாகக் கூறப்படும் நிலையில், அங்கிருந்தவர்கள் தடுத்தும் அந்த நபர் ஆவேசமாக பெண்களைத் தாக்குவதை நிறுத்தவில்லை.

“>

இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பொதுவெளியில் பெண்கள் மீது நடத்தப்பட்ட இந்த மிருகத்தனமான தாக்குதல் பொதுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், பெண்களுக்கு எதிரான இத்தகைய வன்முறைகள் முறியடிக்கப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கொடூரத் தாக்குதல் தொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.