மருத்துவ உலகில் ஒரு புரட்சிகரமான முன்னேற்றமாக, கணையப் புற்றுநோயை அது உடலில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியும் புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
மேலும் பொதுவாக கணையப் புற்றுநோய் ஆரம்பக் கட்டங்களில் எந்தவிதமான வெளிப்படையான அறிகுறிகளையும் காட்டுவதில்லை என்பதால், இது கண்டறியப்படும்போது பெரும்பாலும் குணப்படுத்த முடியாத நிலையை எட்டியிருக்கும்.
ஆனால், இந்த புதிய ஆய்வின் மூலம் நோயாளிகளின் மருத்துவத் தரவுகளை ஆராய்ந்து, மிக நுண்ணிய மாற்றங்களைக் கொண்டு புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகளை முன்கூட்டியே கணிக்க முடியும் என்பது உறுதியாகியுள்ளது.

இந்த கண்டுபிடிப்பு புற்றுநோய் சிகிச்சையில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. முன்கூட்டியே கண்டறிவதன் மூலம், நோயாளிகளுக்குத் தகுந்த சிகிச்சையை ஆரம்பத்திலேயே வழங்கி அவர்களது உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பை பலமடங்கு அதிகரிக்க முடியும்.

இது குறிப்பாக, புற்றுநோய் செல்கள் மற்ற உறுப்புகளுக்குப் பரவுவதற்கு முன்பே அறுவை சிகிச்சை அல்லது மருந்துகள் மூலம் அதைக் கட்டுப்படுத்துவது இப்போது சாத்தியமாகியுள்ளது. இத்தொழில்நுட்பம் எதிர்காலத்தில் மருத்துவப் பரிசோதனைகளில் ஒரு அங்கமாக மாறும் பட்சத்தில், கணையப் புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளைப் பெருமளவில் குறைக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.