இன்றைய அவசர உலகில் ஒரு நொடி கவனக்குறைவு கூட மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. சமூக வலைதளங்களில் தற்போது காட்டுத்தீயாகப் பரவி வரும் ஒரு வீடியோ காண்போரை உறைய வைத்துள்ளது.
ஒரு இளைஞர் மொட்டை மாடியின் ஓரத்தில் அமர்ந்து தண்ணீர் குடிக்க முயன்றபோது நடந்த அந்த விபத்து, ‘பாதுகாப்பு எவ்வளவு முக்கியம்’ என்பதை மீண்டும் உரக்கச் சொல்லியிருக்கிறது.
— Ghar Ke Kalesh (@gharkekalesh) September 14, 2025
வைரல் வீடியோவில், ஒரு இளைஞர் தண்ணீர் பாட்டிலுடன் மொட்டை மாடியின் விளிம்பிற்கு வருகிறார். அங்குள்ள தடுப்புச் சுவர் மிகவும் உயரமாக இல்லாத நிலையில், அதன் மீது அமர்ந்து நிதானமாகத் தண்ணீர் குடிக்க அவர் முயற்சிக்கிறார்.
ஆனால், அமரும்போது தடுப்புச் சுவரின் அளவைச் சரியாகக் கணிக்கத் தவறியதால், எதிர்பாராத விதமாகத் தடுமாறி மாடியிலிருந்து அப்படியே பின்னோக்கித் தலைகீழாகக் கீழே விழுகிறார்.
இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடி வருகின்றனர். அந்த இளைஞருக்குப் பலத்த காயம் ஏற்பட்டதா அல்லது உயிர் தப்பினாரா என்பது குறித்த விவரங்கள் தெளிவாகத் தெரியவில்லை.
“மொட்டை மாடிகளில் தடுப்பு வேலிகள் (Grills) கண்டிப்பாக இருக்க வேண்டும்” என்றும், “எந்த இடத்திலும் கவனக்குறைவாக இருக்கக் கூடாது” என்றும் நெட்டிசன்கள் இந்த வீடியோவிற்குப் பதிவிட்டு வருகின்றனர்.
