கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பாத்திமா. 22 வயதான இவருக்கும், 24 வயதுடைய முகமது என்பவருக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. முகமது போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படும் நிலையில், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரோடு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த முகமது தனது மனைவி பாத்திமாவை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார்.

இந்தக் கொலையை மறைப்பதற்காக பாத்திமாவின் உடலை கடற்கரைக்குக் கொண்டு சென்று மணலில் புதைத்து விட்டுத் தப்பியோடினார். அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள் மணலில் புதைக்கப்பட்டிருந்த உடலை வெளியே இழுத்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி நடத்திய விசாரணையில், மனைவியைக் கொன்று உடலை வீசிய முகமதுவை கைது செய்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.