ஈரான் உடனான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பகிர்ந்துள்ள ஒரு வரைபடம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில் உலகப் புகழ்பெற்ற ஹார்முஸ் ஜலசந்திக்கு பதிலாக “ஸ்ட்ரெயிட் ஆப் டிரம்ப்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

முன்னதாக மேடை ஒன்றில் பேசும்போது, “ஈரான் டிரம்ப் ஜலசந்தியை.. சாரி ஹார்முஸ் ஜலசந்தியை திறந்துவிட வேண்டும்” என டிரம்ப் நா தவறிப் பேசியிருந்தார். “நான் தவறு செய்யமாட்டேன், அப்படி நடந்தால் அது மிகப்பெரிய செய்தியாகும்” என கிண்டலாகக் குறிப்பிட்டிருந்த டிரம்ப், இப்போது அதிகாரப்பூர்வமாக அந்தப் பெயருடனான வரைபடத்தைப் பகிர்ந்து தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்கும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

ஈரான் தனது அணுசக்தி திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மறுத்து வரும் நிலையில், ஓமான் நாட்டுடன் இணைந்து கப்பல்களுக்கு சுங்க வரி விதிப்பது போன்ற அதிரடி நடவடிக்கைகளில் இறங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.