சென்னை திருவொற்றியூரில் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாம்பழம் விற்று வந்த ஏழைப் பாட்டியிடம், மனிதாபிமானமற்ற முறையில் பெண் ஒருவர் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாம்பழம் வாங்குவது போல வந்த அந்தப் பெண், பாட்டியின் கையில்  சிறுவர்கள் விளையாடப் பயன்படுத்தும் ‘சில்ரன் பேங்க் ஆஃப் இந்தியா’ என அச்சிடப்பட்ட 500 ரூபாய் பொம்மை நோட்டைப் கொடுத்து  மாம்பழங்களை வாங்கிக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியுள்ளார்.

சிறிது நேரம் கழித்து நோட்டைப் பார்த்த பாட்டி, அது செல்லாத காகிதம் என்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்து போனார். “வயசான காலத்துல கஷ்டப்பட்டு விக்கிறேனே.. இப்படி ஏமாத்திட்டாளே” எனப் பாட்டி கண்ணீர் மல்கக் கூறியது காண்போரை நெகிழ வைத்தது. இந்த நூதன மோசடியில் ஈடுபட்ட அந்த மர்மப் பெண் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“>