சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1200 ரூபாய் வரையில் குறைந்த நிலையில் தற்போது மாலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை தற்போது 400 ரூபாய் வரையில் குறைந்துள்ளது.
இதன் காரணமாக ஒரே நாளில் 1600 ரூபாய் வரையில் சரிந்து ஒரு சவரன் 1,11,200 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,900 ரூபாய் க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நேற்றும் தங்கம் விலை சரிந்த நிலையில் இன்று தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கம் விலை குறைந்ததால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.
