லண்டனில் உள்ள செல்சியா டவுன் ஹாலில், இத்தாலியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் இணைந்து 440.58 மீட்டர் நீளம் கொண்ட பிரம்மாண்ட ‘திராமிசு’ இனிப்பைத் தயாரித்து உலக சாதனை படைத்துள்ளனர். இத்தாலிய சமையல் கலைஞர் மிர்கோ ரிச்சி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இதற்கு முன்பு மிலனில் படைக்கப்பட்ட 273.5 மீட்டர் நீள சாதனையை இவர்கள் முறியடித்தனர்.
இங்கிலாந்து அரச குடும்பத்தைக் கௌரவிக்கும் விதமாக, இந்த நீளமான இனிப்பின் மீது ஒரு தங்கக் கிரீடமும் அலங்காரமாக வைக்கப்பட்டது அனைவரையும் கவர்ந்தது.இந்தச் சாதனையை நிகழ்த்த சுமார் 19,000 முட்டைகள், 400 கிலோ சர்க்கரை மற்றும் 1,28,000 பிஸ்கட்கள் பயன்படுத்தப்பட்டன.
கின்னஸ் உலக சாதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும், அங்கு திரண்டிருந்த சமையல் கலைஞர்களும் பொதுமக்களும் இத்தாலியின் தேசிய கீதத்தைப் பாடி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். சுமார் 440 மீட்டர் நீளத்திற்கு உருவாக்கப்பட்ட இந்த இனிப்பு, லண்டன் நகரில் ஒரு மிகப்பெரிய இனிப்புத் திருவிழாவைப் போலக் காட்சியளித்தது.
