தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில் மே நான்காம் தேதி தேர்தல் முடிவுக்காக ஒட்டுமொத்த தமிழக மக்களும் தற்போது எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது புதிதாக களமிறங்கியுள்ள விஜய் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவுகிறது. நடிகர் விஜய் தேர்தலில் தன் பலத்தை நிரூபிப்பாரா அல்லது திராவிட கட்சிகள் தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிய வந்துவிடும்.
இந்த நிலையில் நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என விருப்பம் தெரிவித்து தற்போது ஒட்டியுள்ள போஸ்டர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. வருகிற மே மாதம் 1-ம் தேதி நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் வரும் நிலையில் அன்றைய தினமே அரசியல் கட்சி ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும் என ரசிகர்கள் விரும்பி போஸ்டர் ஒட்டியுள்ளனர். மேலும் இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி பேசும் பொருளாக மாறி உள்ளது.
Ajith kumar | அஜித்தை அரசியலுக்கு அழைத்து மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்
Ajithkumar | AK | Ajith poster #Ajithkumar | #AK | #Ajithposter | #Newstamil24x7 | #Tamilnews pic.twitter.com/I0BcxIi6on
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) April 29, 2026
