தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நள்ளிரவு தனி ஜெட் விமானத்தில் மதுரை விமான நிலையத்திற்கு வந்த நிலையில் அங்கிருந்து திருச்செந்தூருக்கு சாலை மார்க்கமாக காரில் சென்றார். அவர் அதிகாலை நேரத்தில் திருச்செந்தூரில் கடலில் புனித நீராடி விட்டு பின்னர் சுவாமி தரிசனம் செய்த நிலையில் சிறப்பு யாகமும் நடைபெற்றது. நடிகர் விஜய்க்கு வேல் பரிசாக கொடுத்து சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இந்த நிலையில் நடிகர் விஜயின் வருகையை முன்னிட்டு அங்கிருந்த இளைஞர்களுக்கு போலீசார் வழங்கிய அறிவுரை தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அதாவது பொதுவாக விஜய் வருகிறார் என்று கூறினாலே ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடிவிடும்.
இதனால் அவர்களை கட்டுப்படுத்துவது சற்று சிரமமாகவே இருக்கும் நிலையில் அவரது வாகனத்தை பின்தொடர்வது மற்றும் விபத்தில் சிக்குவது போன்ற சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில் திருச்செந்தூரில் காவல் ஆய்வாளர் நடிகர் விஜய் கோவிலுக்கு வந்துட்டு செல்லும் வரையில் நீங்களும் போலீஸ் தான் என்று அறிவுரை வழங்கினார். மேலும் இப்படி கூறினால் அவரது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும் ரசிகர்கள் கட்டுக்கோப்பாக இருப்பார்கள் என்றும் காவல் ஆய்வாளர் வித்தியாசமான முறையில் அறிவுரை வழங்கி ரசிகர்களை கட்டுப்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி காவல் ஆய்வாளருக்கு பாராட்டுகள் என்பது குவிந்து வருகிறது
தவெக தலைவர் விஜய் வந்துட்டு போற வரைக்கும் நீங்களும் போலீஸ் தான் – திருச்செந்தூர் கோவிலில் விஜய் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கிய காவல் ஆய்வாளருக்கு குவியும் பாராட்டு வீடியோ வைரல்…!#TVKVijay #Tiruchendur #PoliceInspector #PMIST #ViralWatch #Oneindia #OITamil pic.twitter.com/553QXeNwR4
— Oneindia Tamil (@thatsTamil) April 28, 2026
