மும்பையில் சாலையோர உணவகத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்த நபர் ஒருவர், தன்னிடமிருந்த உணவை ஒரு அந்நியருடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனால் வெளிநாட்டவர் ஒருவர் அந்த நபரை அணுகி, அவர் சாப்பிட்டுக்கொண்டிருந்த தட்டிலிருந்து உணவைப் பகிர்ந்து கொள்ளக் கேட்டபோது, எவ்விதத் தயக்கமுமின்றி அவர் அந்த வெளிநாட்டவரை அன்புடன் வரவேற்று உணவை வழங்கினார்.
View this post on Instagram
“>
மேலும் “உங்களுக்கு மிகச் சிறந்த மனசு தம்பி” என்று அந்த வெளிநாட்டவர் அவரை மனதாரப் பாராட்டியது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உண்மையில், அந்த வெளிநாட்டவர் அந்த நபரின் குணத்தை சோதிப்பதற்காகவே அப்படிச் செய்ததாக பின்னர் தெரியவந்தது. அந்த நபரின் கள்ளங்கபாடற்ற உபசரிப்பும், முகத்தில் ததும்பிய புன்னகையும் இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளன.
இந்நிலையில் மும்பை போன்ற பரபரப்பான நகரத்திலும் மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை இந்தச் சம்பவம் நிரூபிப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எளிய மனிதர்களின் பெரிய மனதைக் கொண்டாடும் இந்த வீடியோ, இணையத்தில் ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டு பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.
