தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு தற்போது தமிழகத்தில் மிகப்பெரிய விவாதப் பொருளாகியுள்ளது. 25 ஆண்டு கால திருமண வாழ்க்கையைத் தொடர்ந்து, சங்கீதா தாக்கல் செய்துள்ள 12 பக்க விவாகரத்து மனுவில், விஜய் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, ஒரு நடிகையுடனான தொடர்பு மற்றும் மன உளைச்சல் காரணமாகவே இந்தப் பிரிவை நாடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 20-ம் தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, தற்போது ஜூன் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ​இதற்கிடையில், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு பேட்டியில், இவர்கள் இருவரும் ஏற்கனவே பிரிந்துவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தது தற்போது உண்மையாகி வருகிறது. சமூக வலைதளங்களில், விஜய் தனது ரசிகையிடம் “எனது பலவீனம் கோபம்தான்” என்று கூறிய பழைய வீடியோ ஒன்றை நெட்டிசன்கள் வைரல் செய்து வருகின்றனர்.

விஜய்யின் இந்த ‘ஷார்ட் டெம்பர்’ குணம்தான் சங்கீதாவுடனான மோதலுக்குக் காரணமோ என்ற சந்தேகத்தை அவர்கள் எழுப்பி வருகின்றனர். மேலும், நீலாங்கரை வீட்டில் தொடர்ந்து வசிப்பதற்கான உரிமையையும் சங்கீதா கோரியுள்ளதாகத் தெரிகிறது. எது எப்படியோ, ஜூன் 15-ம் தேதி நீதிமன்றம் அளிக்கப்போகும் தீர்ப்பே இந்த நீண்ட கால மர்மத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்.