தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் போட்டியிடப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. “சிவகங்கை மண்ணில் உனக்கென்ன வேலை?”, “புலிப்படையா? ஃபுல் குடியா?” என கருணாஸை தனிப்பட்ட முறையில் தாக்கும் வகையிலான வாசகங்கள் அந்த போஸ்டர்களில் இடம்பெற்றுள்ளன.
A poster against Mukulathor Pulippadai leader #Karunas has been pasted in Sivaganga.
It is reported that this poster was put up as news spread that Karunas is likely to contest from the Sivaganga constituency.#Sivaganga #Karunas pic.twitter.com/Uczxvq6T58
— Rajkumar (@itzproudloser) March 28, 2026
மேலும், “ஸ்டாலின் தொடரட்டும், கருணாஸ் கொள்ளையடிக்கட்டும்” என்பது போன்ற கடுமையான விமர்சனங்களும் அதில் முன்வைக்கப்பட்டுள்ளன. கருணாஸ் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், தொகுதிக்குள் அவருக்கு இருக்கும் எதிர்ப்பு இந்த போஸ்டர்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது உட்கட்சிப் பூசலா அல்லது எதிர்க்கட்சிகளின் வேலையா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் தேர்தல் களத்தில் கருணாஸுக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
