மனிதாபிமானம் செத்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றும் ஒரு வருத்தமான சம்பவம் சமூக வலைதளங்களில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு ஏழை ரிக்ஷா தொழிலாளி, இரண்டு பெண்களை அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றதும், “சற்று நேரத்தில் திரும்பி வந்துவிடுகிறோம், அதுவரை காத்திருங்கள்” என்று கூறிவிட்டு அந்தப் பெண்கள் உள்ளே சென்றுள்ளனர்.

அவர்களை நம்பி அந்த ரிக்ஷா தொழிலாளியும் வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்துள்ளார். ஆனால், அந்தப் பெண்கள் ரிக்ஷா கூலியான வெறும் 20 அல்லது 30 ரூபாயைக் கொடுக்கக் கூட மனமில்லாமல், மற்றொரு வாசல் வழியாகத் தப்பிச் சென்றுவிட்டனர். அந்தச் சிறிய தொகையை மிச்சப்படுத்த அவர்கள் செய்த இந்தச் செயல், அந்த உழைப்பாளியின் நம்பிக்கையைச் சிதைத்துள்ளது.
<a href="http://

“>

பணத்தை விடவும், ஒருவரின் நேர்மையையும் உழைப்பையும் அவமதிக்கும் இத்தகைய போக்கு சமூகத்தில் அறம் குறைந்து வருவதையே காட்டுகிறது என நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆதங்கத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.