பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் பெஷாவர் சால்மி அணியின் கேப்டன் பாபர் அசாம், இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியுடன் ஒப்பிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் 15 வயது சிறுவன் வைபவ், வெறும் 36 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். அதே நாளில் பாபர் அசாம் 40 பந்துகளில் 50 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
Pakistani Journalists : "In IPL, A 15 Year old Vaibhav Sooryavanshi Scored 36 Balls 100 today and on the same day you scored 40 balls 50, Don't you think PAKISTAN need to change their game?
Babar Azam :- "Leave it, I don't want to answer your question" pic.twitter.com/XgzofwRYW7
— Rohit (@Iam_Rohit_G) April 26, 2026
இது குறித்து பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர், “15 வயது சிறுவன் 36 பந்தில் சதம் அடிக்கிறான், நீங்கள் 40 பந்தில் 50 ரன் எடுக்கிறீர்கள்.. பாகிஸ்தான் கிரிக்கெட் மாற வேண்டாமா?” என நேரடியாகக் கேள்வி எழுப்பினார். இதனால் தர்மசங்கடமான பாபர், “இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை, இதை விட்டுவிடுங்கள்” எனக்கூறி நழுவினார். 12 சிக்ஸர்களுடன் ஐபிஎல் களத்தை அதிர வைத்த வைபவ் சூர்யவன்ஷி, தற்போது உலக கிரிக்கெட்டின் எதிர்காலமாகப் பார்க்கப்படுகிறார். அதே சமயம், மெதுவான ஆட்டத்திற்காக பாபர் அசாம் தொடர்ந்து விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார்.
