ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தத் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன், குஜராத் கேப்டன் சுப்மன் கில்லை ஆட்டமிழக்கச் செய்த விதம் மைதானத்தையே வியப்பில் ஆழ்த்தியது. நூர் அகமது வீசிய பந்தை கில் அடிக்கத் தவற, அந்தப் பந்து ‘வைடு’ ஆகச் சென்றது.

ஆனால், சற்றும் தாமதிக்காத சஞ்சு சாம்சன், மின்னல் வேகத்தில் பந்தைப் பிடித்து ஸ்டம்பிங் செய்தார். அந்த நொடியில் கில்லின் கால் காற்றில் சற்று உயரே இருந்ததால், அவர் அவுட் என அறிவிக்கப்பட்டார்.

சஞ்சு சாம்சனின் இந்த அதிரடி ஸ்டம்பிங், சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியை அப்படியே கண்முன் கொண்டு வந்தது. 2016 டி20 உலகக்கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிராக தோனி செய்த அதே போன்றதொரு மின்னல் வேக ஸ்டம்பிங்கை இது நினைவூட்டியதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

“>

 

தோனியின் இடத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் சஞ்சு சாம்சன் காட்டிய இந்த அபாரமான வேகம், சிஎஸ்கே ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இந்தப் போட்டியின் வீடியோவும், சஞ்சுவின் வேகமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.