சீனாவின் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் போன்ற நகரங்களில் உள்ள பொதுக் கழிவறைகள் இப்போது வெறும் கழிவறைகளாக மட்டும் இல்லை. அவை அதிநவீன மருத்துவப் பரிசோதனைக் கூடங்களாக மாறியுள்ளன. இந்தியப் பயணி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், சீனாவின் ‘ஸ்மார்ட் யூரினல்’ எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கண்டு உலகமே வியந்து போயுள்ளது.
நீங்கள் சிறுநீர் கழித்து முடித்த அடுத்த 2 நிமிடங்களில், உங்கள் உடலின் குளுக்கோஸ் அளவு, சிறுநீரகச் செயல்பாடு, கால்சியம் மற்றும் வைட்டமின் சி போன்ற 14-க்கும் மேற்பட்ட உடல்நலக் குறியீடுகளைத் திரையில் காட்டி விடுகிறது. இதனைப் பயன்படுத்த வெறும் 20 யுவான் (சுமார் 230 ரூபாய்) மட்டும் செலுத்தி, QR கோடை ஸ்கேன் செய்ய வேண்டும்.
View this post on Instagram
இதிலுள்ள சென்சார்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், உடனுக்குடன் முடிவுகளை உங்கள் ‘வீசாட்’ ஆப்பிற்கு அனுப்பிவிடும். ஷாங்காய் மாலில் இதனைப் பயன்படுத்திய இந்தியப் பயணி ஒருவர், “சாதாரணமாகத்தான் சென்றேன், ஆனால் என் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாக ரிப்போர்ட் வந்ததைப் பார்த்து அதிர்ந்து போனேன்.
உடனே டாக்டரைப் பார்த்தேன்” எனக் கூறியுள்ளார். ஆரம்பக்கட்டப் பரிசோதனைக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் என மருத்துவர்கள் கூறினாலும், சீனாவின் இந்த அசுர வளர்ச்சியைப் பார்த்து, “இந்தியாவுக்கும் இது எப்போது வரும்?” என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
