விடுதிகளில் தங்கும் மாணவிகள் தங்கள் உடமைகள் காணாமல் போவது குறித்துப் புகார் அளிப்பது வழக்கம். ஆனால், சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு மாணவி தனது உள்ளாடை திருடப்பட்டது குறித்து மிகவும் நகைச்சுவையான முறையில் கேள்வி எழுப்பி பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.

மேலும் தனது 32B அளவிலான உள்ளாடையைத் திருடிய நபர் யார் என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், “இந்த 32B அளவு யாருக்குப் பொருந்துகிறது? யாரிடம் அந்த ரகசியத் திறமை ஒளிந்திருக்கிறது?” என்று கிண்டலாகக் கேட்டுள்ளார். கோபப்படுவதற்குப் பதிலாக, அவர் கையாண்ட இந்த நகைச்சுவை பாணி இணையதளவாசிகளைப் பெருமளவில் கவர்ந்துள்ளது.

“>

இந்த விடுதி வாழ்க்கையில் நடக்கும் இத்தகைய விசித்திரமான திருட்டுகள் குறித்துப் பலரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அந்த மாணவியின் தைரியமான மற்றும் நகைச்சுவையான அணுகுமுறை பலரையும் சிரிக்க வைத்ததுடன், விடுதிகளில் மாணவிகளின் தனிப்பட்ட உடமைகளின் பாதுகாப்பு குறித்த விவாதத்தையும் கிளப்பியுள்ளது.