இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸின் தற்போதைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. எப்போதும் கட்டுமஸ்தான உடலோடு கம்பீரமாக இருக்கும் ஸ்டோக்ஸ், தற்போது அடையாளம் தெரியாத அளவுக்கு மெலிந்து, முகம் மாறிய நிலையில் காணப்படுகிறார். இங்கிலாந்து அணியின் புதிய ஜெர்சி அறிமுக வீடியோவில் இவரைப் பார்த்த ரசிகர்கள், “இது நிஜமாவே பென் ஸ்டோக்ஸ் தானா?” என்று கேட்கும் அளவுக்கு அவரது தோற்றம் மாறியுள்ளது.
New look of Ben Stokes❤
After surgery, Ben Stokes shows a noticeable facial transformation, reflecting the severity of the injury and his determined journey toward recovery. 🤯 pic.twitter.com/pnKly6zo7a
— Danish (@BhttDNSH100) April 25, 2026
இதற்குப் பின்னால் ஒரு மரண பயத்தை காட்டிய விபத்து ஒளிந்திருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் பயிற்சியின் போது ஒரு பந்து நேரடியாக பென் ஸ்டோக்ஸின் முகத்தில் தாக்கியதில், அவரது வலது பக்க தாடை எலும்பு சுக்குநூறாக உடைந்தது. “அந்தப் பந்து இன்னும் இரண்டு இன்ச் தள்ளி பட்டிருந்தால், இன்று நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன்” என்று அவரே உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இதற்காகப் பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது குணமடைந்து வரும் அவர், ஜூன் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் களமிறங்கத் தயாராகி வருகிறார்.
