சமூக வலைதளங்களில் பல விசித்திரமான வீடியோக்கள் வந்தாலும், இப்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ பார்ப்பவர்களின் இதயத் துடிப்பையே ஒரு நிமிடம் நிறுத்திவிடும் போலிருக்கிறது. காட்டில் சிங்கம், புலியைக் கூட ஒரு கை பார்க்கும் ராட்சத முதலை ஒன்றை, ஒரு சிறுவன் சர்வ சாதாரணமாகக் கையாண்டுள்ளார். அந்த வீடியோவில், சிறுவன் ஒருவன் குளத்தை நோக்கி ஓடிச் சென்று குரல் கொடுக்கிறார்.
உடனே தண்ணீருக்குள்ளிருந்து ஒரு பிரம்மாண்ட முதலை வெளியே வருகிறது. அந்த முதலையைக் கண்டு பயந்து ஓடாமல், அதன் அருகில் சென்ற அந்தச் சிறுவன், முதலையின் வாயைத் திறந்து அதன் கூர்மையான பற்களை பிரஷ் கொண்டு தேய்த்து விடுகிறார். மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்தப் பயங்கரமான முதலை அந்தச் சிறுவனை எதுவும் செய்யாமல், ஒரு செல்லப் பிராணி போல அமைதியாகத் தனது பற்களைச் சுத்தம் செய்து கொள்கிறது.
View this post on Instagram
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இவர் என்ன தைரியத்தில் இப்படிச் செய்கிறார்? ஒருவேளை முதலை கடித்திருந்தால் சிறுவனின் நிலை என்ன ஆகியிருக்கும்?” என அச்சம் தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில், இது போன்ற ஆபத்தான காரியங்களை யாரும் முயற்சிக்க வேண்டாம் எனவும் சமூக வலைதளங்களில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
