வங்கிகளின் நிதி அமைப்பில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் அதிகரித்து வரும் சவால்கள் மற்றும் புதிய சைபர் தாக்குதல்கள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கித் தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். குறிப்பாக, ‘Anthropic’ நிறுவனத்தின் ‘Mythos’ போன்ற அதிநவீன AI மாடல்கள் மென்பொருள் குறைபாடுகளைக் கண்டறிந்து நிதி மோசடிகளுக்குப் பயன்படுத்தப்படலாம் என்ற உலகளாவிய அச்சத்திற்கு மத்தியில் இந்த கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

​மத்திய ஐடி அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களும் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், வாடிக்கையாளர்களின் தரவு (Data) மற்றும் பணத்தைப் பாதுகாக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. “வங்கிகள் இதுவரை சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம், ஆனால் இந்த புதிய AI அச்சுறுத்தல்களைச் சமாளிக்க இன்னும் மேம்பட்ட பாதுகாப்பு தேவை” என நிதியமைச்சர் எச்சரித்துள்ளார். மேலும், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை உடனடியாக CERT-In அமைப்பிற்குத் தெரிவிக்கவும், வங்கிகள் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள ஒரு ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.