குருகிராமில் உள்ள மதுக்கடைக்கு வெளியே, இளம்பெண் ஒருவரை ஆண் ஒருவர் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த நபர் பெண்ணை சரமாரியாக அறைந்துள்ளார்; பதிலுக்கு அந்தப் பெண்ணும் அவரைத் தாக்கியதோடு சட்டையைப் பிடித்து இழுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அங்கிருந்த ஏராளமான மக்கள் இதைத் தடுத்து நிறுத்தாமல், வேடிக்கை பார்த்தபடியும் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்தபடியும் நின்றது பலரையும் வேதனை அடையச் செய்துள்ளது.

இதுகுறித்து இதுவரை யாரும் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கவில்லை என்றாலும், வைரலாகும் வீடியோவை வைத்து ஹரியானா போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

அந்தப் பெண் ஆபாசமாகப் பேசியதால் தான் ஆத்திரமடைந்ததாக அந்த நபர் தரப்பில் கூறப்பட்டாலும், வன்முறை எதற்கும் தீர்வாகாது என சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.

இவர்கள் இருவரும் ஏற்கனவே அறிமுகமானவர்களா அல்லது அந்த இடத்தில் தான் பிரச்சனை தொடங்கியதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“>

 

ஒரு பெண் பொது இடத்தில் தாக்கப்படும்போது மக்கள் உதவாமல் வேடிக்கை பார்த்தது பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.