தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 85 சதவீத வாக்குப்பதிவுடன் விறுவிறுப்பாக முடிவடைந்த நிலையில், ஒருபுறம் அரசியல் களம் சூடாக இருக்க, மறுபுறம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் குடும்ப விவகாரம் சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது.

விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து குறித்த செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவரது பிள்ளைகளின் நிலைப்பாடு குறித்துப் பலவிதமான தகவல்கள் பரவி வருகின்றன.

குறிப்பாக, விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாக சங்கீதா தனது மனுவில் குறிப்பிட்டதாகக் கூறப்படும் நிலையில், மகன் ஜேசன் சஞ்சய் தனது தந்தை விஜய்யை இன்ஸ்டாகிராமில் ‘அன்ஃபாலோ’ செய்துவிட்டதாகத் தகவல் வெளியானது. எனினும், அவர் ஆரம்பத்திலிருந்தே தந்தையைப் பின்தொடரவில்லை என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்தச் சூழலில், விஜய்யின் மகள் திவ்யா சாஷா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் “ஜனநாயகன்” படத்தில் இடம்பெற்ற “கண்ணே மணியே கன்னிமையே” என்ற உருக்கமான பாடலைப் பதிவிட்டுள்ளது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ஏற்கனவே மகளின் பட்டமளிப்பு விழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் விஜய் பங்கேற்காத நிலையில், அண்ணன் சஞ்சய் தான் தந்தை ஸ்தானத்தில் இருந்து தங்கையை வழிநடத்தினார். தற்போது திவ்யா சாஷா பகிர்ந்துள்ள இந்தப் பதிவு, குடும்பத்திற்குள் நடக்கும் மோதல்களின் வெளிப்பாடா அல்லது தற்செயலான ஒன்றா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதே சமயம், அந்த இன்ஸ்டாகிராம் பக்கம் உண்மையிலேயே திவ்யா சாஷாவினுடையது தானா என்ற சந்தேகமும் ஒருபுறம் நிலவுகிறது. தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த இந்தத் தகவல்கள் இணையத்தில் ‘ஹாட்’ டாபிக்காக மாறியுள்ளன.