மேற்கு வங்கத்தில் நேற்று நடைபெற்ற 152 தொகுதிகளுக்கான முதற்கட்ட சட்டமன்றத் தேர்தலில், பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். இது குறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற 152 தொகுதிகளில் குறைந்தது 110 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறுவது உறுதி என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

​நேற்று பதிவான வரலாறு காணாத வாக்குப்பதிவு, மக்கள் மாற்றத்தை விரும்புவதையே காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார். மேற்கு வங்க மக்கள் காட்டிய இந்த ஆர்வம், வரும் மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவரும் போது பாஜக ஆட்சியைப் பிடிப்பதை உறுதி செய்யும் என்றும் அவர் ஆணித்தரமாகக் கூறினார். அமித்ஷாவின் இந்தக் கணிப்பு மற்றும் 110 சீட்கள் குறித்த அறிவிப்பு தற்போது இந்திய அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.