தமிழகத்தில் 2026 ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல், இதுவரை கண்டிராத ஒரு புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். முன்னெப்போதும் இல்லாத வகையில் 85% வாக்குப்பதிவு பதிவாகியிருப்பது, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

​வாக்குச்சாவடிகள் அனைத்தும் கோவில்களில் திருவிழாக் காலங்களில் காணப்படும் கூட்டத்தைப் போல, குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து வாக்களித்த விதம் தமக்கு வியப்பை ஏற்படுத்தியதாக விஜய் நெகிழ்ந்துள்ளார். குறிப்பாக, பெரும் செலவு செய்து வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வந்து வாக்களித்த ஜனநாயகப் போர்வீரர்களைத் தான் இருகரம் கூப்பி வணங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். “தேர்தல் திருவிழா” என்பதன் உண்மையான அர்த்தம் நேற்றுதான் முழுமையாக உணரப்பட்டது என அவர் அந்த அறிக்கையில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.