தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளிலும் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு காலை முதலே மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்கு பதிவு செய்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு மாலை 3 மணிக்கு 70% அளவுக்கு வாக்குப்பதிவுகள் நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பிரபலங்கள் பலரும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வரும் நிலையில் தங்களுடைய ஆதரவுகளையும் அரசியல் கட்சிகளுக்கு தெரிவித்து வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Trish (@trishakrishnan)

அந்த வகையில் நடிகை திரிஷா தன்னுடைய வாக்கினை பதிவு செய்த நிலையில் தற்போது அது தொடர்பான புகைப்படத்தை நடிகர் விஜயின் பாடலுடன் வெளியிட்டுள்ளார். முதலில் விசில் சத்தம் ஒழிக்க பின்னர் கில்லி பட பாடல் ஒலிக்கிறது. இதன் காரணமாக அவர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு தன்னுடைய ஆதரவை தெரிவிப்பதாக ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். மேலும் விஜய் மற்றும் அவரது மனைவி இடையே விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் திரிஷா மற்றும் விஜய் குறித்த சர்ச்சைகள் பரவி வருகிறது. மேலும் இந்த நிலையில் நடிகை திரிஷா விஜய் பட பாடலுடன் வாக்குப்பதிவு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.