தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மூத்த நடிகர் சிவகுமார் அவர்கள் சென்னையில் உள்ள தனது பகுதியில் வாக்களித்தார். ஜனநாயகக் கடமையை முடித்துவிட்டு வெளியே வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசியபோது தமிழக அரசுக்கு மிகவும் கடுமையான கோரிக்கை ஒன்றை வைத்தார். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தமிழகத்தில் டாஸ்மாக் (TASMAC) கடையை ஒழிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர் ஆக்ரோஷமாகத் தெரிவித்தார்.
#WATCH | Tamil Nadu Elections 2026 | Veteran Actor Sivakumar casts his vote at a polling station in Chennai.
Veteran actor Sivakumar says, "Whichever party forms the government must prioritise the abolition of Tamil Nadu State Marketing Corporation Limited (TASMAC). No… pic.twitter.com/ss2eqyNVNt
— ANI (@ANI) April 23, 2026
”ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் கோடிக்கணக்கான ரூபாய்களைச் சம்பாதிப்பதை விட, மாநிலத்தின் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதுதான் முக்கியம். இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் மற்றும் எதிர்காலத்தைச் சீரழிக்கும் எந்தவொரு கொள்கையையும் அரசு முன்னெடுக்கக் கூடாது. டாஸ்மாக் போன்ற வருமானம் ஈட்டும் வழிகளுக்காக மக்களின் வாழ்க்கையோடு விளையாடுவது ஏற்புடையதல்ல” என சிவகுமார் காட்டம் தெரிவித்தார். தேர்தல் நாளில் ஒரு மூத்த நடிகர் இப்படி வெளிப்படையாக மதுவிலக்கு குறித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
