தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வருகை தந்தபோது ஒரு சுவாரசியமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

வாக்குச்சாவடிக்கு வெளியே விஜய்யைப் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர்; அப்போது அங்கு வரிசையில் நின்றிருந்த ஒரு ரசிகர், திடீரென தனது மனைவிக்கு வீடியோ கால் செய்து, திரையில் விஜய்யைக் காட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அந்த ரசிகர் தனது செல்போனை விஜய்யை நோக்கி உயர்த்திப் பிடித்தபடி, வீடியோ காலில் இருந்த தனது மனைவியிடம், “இங்க பாரு.. தளபதி வந்திருக்காரு!” என உற்சாகமாகக் கூச்சலிட்டார்.

இதைக் கவனித்த விஜய்யும் சற்றும் முகம் சுளிக்காமல், அந்த ரசிகரின் செல்போன் கேமராவைப் பார்த்து புன்னகையுடன் கையசைத்தது அங்கிருந்தவர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

“>