ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முக்கியமான ‘எல் கிளாசிகோ’ போட்டிக்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி தனது பேட்டைச் செதுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
தசைநார் காயம் காரணமாக இந்த சீசனின் முதல் ஆறு போட்டிகளில் விளையாடாத தோனி, வியாழக்கிழமை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் மீண்டும் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இல்லாததால் சிஎஸ்கே அணி தடுமாறி வரும் நிலையில், தல தோனியின் வருகைக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
வைரலாகி வரும் அந்த வீடியோவில், தோனி ஒரு மின்சாரக் கருவியைப் பயன்படுத்தி தனது பேட்டின் பின்புறத்தைச் செதுக்கி மெருகேற்றுவதைக் காண முடிகிறது.
ஐபிஎல் 2026-ன் புதிய விதிகளின்படி, கள நடுவர்கள் பயன்படுத்தும் ‘பேட் கேஜ்’ சோதனையில் தேர்ச்சி பெறும் பேட்டுகளை மட்டுமே வீரர்கள் பயன்படுத்த முடியும்.
View this post on Instagram
“>
இந்த சீசனில் பல வீரர்கள் இந்த சோதனையில் தோல்வியடைந்து தங்களது விருப்பமான பேட்டுகளைப் பயன்படுத்த முடியாமல் போன நிலையில், தோனி தனது பேட்டை விதிகளுக்கு உட்பட்டு தயார் செய்து வருகிறார்.
