மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற இரண்டு இந்தியக் கப்பல்களை ஈரான் ராணுவம் அதிரடியாகச் சிறைபிடித்துள்ளது. இது சர்வதேச கடல் வழிப் போக்குவரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியக் கப்பல்கள் தவிர, அந்த வழியாகச் சென்ற மற்ற நாடுகளின் சரக்குக் கப்பல்களையும் ஈரான் இலக்கு வைத்துள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக யுபோரியா, பனாமா, லைபீரியா
ஆகிய நாடுகளுக்குச் சொந்தமான வணிகக் கப்பல்கள் மீதும் ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் இந்த அதிரடி நடவடிக்கையால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் போக்குவரத்து மற்றும் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது. சிறைபிடிக்கப்பட்ட இந்தியக் கப்பல்களில் உள்ள ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தீவிரமாக கண்காணித்து வருவதாகத் தெரிகிறது. மத்திய கிழக்கு கடற்பகுதியில் நிலவும் இந்த போர் பதற்றமான சூழலால், சர்வதேச நாடுகள் கவலையடைந்துள்ளன.
