மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து அரசு ஊடகமான தூர்தர்ஷனில் பிரதமர் மோடி உரையாற்றியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை விமர்சித்தது விதிமீறல் என்று கூறி, தேர்தல் ஆணையத்தில் சுமார் 700 புகார்கள் குவிந்துள்ளன.
இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்ட தேர்தல் ஆணையம், இது குறித்து விரிவான விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. பிரதமரின் உரை தேர்தல் விதிகளை மீறியுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
