சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரத்யேகமாக ‘கட்டுப்பாட்டு அறை’ (War Room) அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலைத் திட்டமிட்டபடி திறம்படக் கையாளவும், தேர்தல் களத்தில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு உடனுக்குடன் தீர்வுகாணவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

​இந்தக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ள 08069446900 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்கள் அல்லது கள நிலவரங்கள் குறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என திமுக தலைமை அறிவித்துள்ளது.