ஐபிஎல் 2026 தொடரில் தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்று மீண்டும் பழைய ஃபார்முக்குத் திரும்பியுள்ளது.
இந்த ஆட்டத்தில் மும்பை அணியின் இளம் நட்சத்திரம் திலக் வர்மா 45 பந்துகளில் 101 ரன்கள் விளாசி, ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணிக்காக ‘அதிவேக சதம்’ அடித்த வீரர் என்ற புதிய சரித்திரத்தைப் படைத்தார். ஆட்டத்தின் தொடக்கத்தில் தடுமாறிய திலக் வர்மா, முதல் 22 பந்துகளில் வெறும் 19 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தபோது, ரன் ரேட் குறைவாக இருந்ததால் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆடுகளத்தின் நடுவிலேயே அவரை கடுமையாகக் கண்டித்தார்.
When Tilak Varma struggling at 19 off 22 balls, a strict word from Hardik Pandya changed everything—he smashed 82 runs off the next 23 balls and scored his first IPL century 🔥#GTvsMI #MIvsGT pic.twitter.com/ouipWuWThk
— Sekar 𝕏 (@itzSekar) April 20, 2026
“>
கேப்டனிடம் அந்தத் திட்டு வாங்கிய அடுத்த கணமே ருத்ரதாண்டவம் ஆடிய திலக், அடுத்த 23 பந்துகளில் மட்டும் 356 ஸ்டிரைக் ரேட்டில் 82 ரன்களைப் பறக்கவிட்டு சதமடித்து மைதானத்தையே அதிர வைத்தார்.
இந்த அதிரடி மாற்றத்தால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 199 ரன்கள் குவித்தது. ஆட்டத்திற்குப் பின் பேசிய பாண்டியா, “திலக் மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை இருந்தது; அவர் தனது மாயாஜாலத்தைக் காட்ட வேண்டிய நேரம் இது என்றுதான் அவரிடம் கூறினேன்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
From steady to unstoppable 😮🔥#TilakVarma’s maiden TATA IPL hundred comes in style and what a way to do it.💪🏻
That second-half acceleration from Tilak Varma was unreal . 👀🔥#TATAIPL 2026 | #GTvMI | LIVE NOW 👉 https://t.co/EXwHuATWcw pic.twitter.com/KgdZznGtR5
— Star Sports (@StarSportsIndia) April 20, 2026
“>
மறுபுறம், ஜஸ்பிரித் பும்ராவைத் தொடக்கத்திலேயே பந்துவீச அழைக்காதது குறித்த விமர்சனங்களுக்கும் பாண்டியா பதிலடி கொடுத்தார். அகமதாபாத் மண்ணில் மும்பை அணி பெற்ற இந்த முதல் வெற்றி, அந்த அணியின் ரசிகர்களுக்குப் பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது. குஜராத் கேப்டன் ஷுப்மன் கில், கடைசி 6 ஓவர்களில் 95 ரன்களை வாரி வழங்கியது தங்களின் தோல்விக்கு முக்கியக் காரணம் என வருத்தத்துடன் ஒப்புக்கொண்டார். திலக் வர்மாவின் இந்த அசுரத்தனமான ஆட்டம் தற்போது சமூக வலைதளங்களில் “மாஸ்” வீடியோவாக வைரலாகி வருகிறது.
