பெரம்பூர் தொகுதியில் நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை மறைமுகமாகச் சாடிப் பேசினார். “உங்க வீட்டு பிள்ளையாக, உங்களில் ஒருவனாக இருந்து உங்களுக்காகப் பணியாற்றுகிற ஒருவன் வேண்டுமா? அல்லது எங்கிருந்தோ திடீரென அரசியலுக்கு வந்து நாடகமாடுபவர் வேண்டுமா?” என்று அவர் மக்களிடம் கேள்வி எழுப்பினார்.
நீண்டகாலமாக மக்களுடன் இருந்து பணியாற்றி வரும் தங்களது கட்சியை ஆதரிக்க வேண்டும் என்றும், புதிதாகக் கட்சி ஆரம்பித்து மேடை ஏறுபவர்களை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
“உங்க வீட்டு பிள்ளையாக இருந்து பணியாற்றுகிற ஒருவன் வேண்டுமா..? எங்கிருந்தோ புதுசா அரசியலுக்கு வந்து நாடகமாடுபவர் வேணுமா..?” – விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி..#Chennai | #CMMKStalin | #DMK | #ElectionCampaign |… pic.twitter.com/qJXFodmdEe
— Polimer News (@polimernews) April 20, 2026
“>
விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு முதலமைச்சர் அவரை நேரடியாகத் தாக்கிப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
