பாலிவுட் நடிகையும் தற்போதைய எம்.பி-யுமான கங்கனா ரணாவத், மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானுடன் காதலில் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு அதிரடியாகப் பதிலளித்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்துப் பேசிய அவர், சிராக் பாஸ்வான் தனக்கு நீண்ட கால நண்பர் மட்டுமே என்றும், தங்களுக்குள் காதல் ஏதும் இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான ‘மிலே நா மிலே ஹம்’ திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்ததிலிருந்து இந்த நட்பு தொடர்வதாகக் குறிப்பிட்ட கங்கனா, “எங்களுக்குள் காதல் இருந்திருந்தால், இந்நேரம் எங்களுக்குக் குழந்தைகளே பிறந்திருக்கும்” என்று நகைச்சுவையாகக் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பாராளுமன்ற வளாகத்தில் இருவரும் சிரித்துப் பேசிய வீடியோக்கள் வைரலானதைத் தொடர்ந்து எழுந்த இந்த டேட்டிங் கிசுகிசுக்களுக்கு, கங்கனாவின் இந்த நேரடிப் பதில் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
