2026 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி தனது அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் முக்கிய நாயகனாக இந்திய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் திகழ்ந்தார். இலக்கை தற்காப்பதில் மிகச்சிறப்பாக பந்துவீசி அணியின் வெற்றிக்கு அவர் உறுதுணையாக இருந்தார்.
மேலும் போட்டியின் முடிவில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா மகிழ்ச்சியில் அர்ஷ்தீப் சிங்கை கட்டித்தழுவி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். பிரீத்தி ஜிந்தாவிடம் இருந்து அந்த அன்பான அணைப்பைப் பெற்றவுடன், அர்ஷ்தீப் சிங் மிகுந்த உற்சாகத்துடன் தனது இரு கைகளையும் உயர்த்தி கத்திக் கொண்டாடினார். இவருடைய இந்த மகிழ்ச்சியான எதிர்வினை அருகில் இருந்த முகமது ஷமியை சிரிக்க வைத்தது மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களிலும் காட்டுத்தீயாக பரவி வைரலாகி வருகிறது.
Arshdeep Singh’s priceless reaction after getting a hug from Preity Zinta, even Shami couldn’t control his laugh 🤣👌🏻
Bro was representing every PZ fanboy there 🔥 pic.twitter.com/7ZPT73X8G3
— Rohan💫 (@rohann__45) April 20, 2026
“>
இந்நிலையில் அர்ஷ்தீப் சிங்கின் இந்த ரியாக்ஷன் ஒட்டுமொத்த பஞ்சாப் கிங்ஸ் ரசிகர்களின் உணர்வை பிரதிபலிப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடப்பு சீசனில் தோல்வியே சந்திக்காமல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பஞ்சாப் அணி, இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் இருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
