உத்தரப்பிரதேசத்தில் தனது மகனைக் கொன்ற நபரை, விபத்து போலச் சித்தரித்து ஒரு தந்தை பழிவாங்கியுள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மகனைப் படுகொலை செய்த நபர் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த அந்தத் தந்தை, மிகக் கச்சிதமாகத் திட்டமிட்டு ஒரு லாரியை மோதச் செய்து அந்தப் படுகொலையை விபத்து போல மாற்றியுள்ளார்.

எனினும், காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில் இது தற்செயலான விபத்து அல்ல என்பதும், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கொலை என்பதும் வெளிச்சத்திற்கு வந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் தற்போது ஒருவரைக் கைது செய்துள்ளனர். சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டு பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் அரங்கேற்றப்பட்ட இந்தச் செயல் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஒரு தந்தை போட்ட ‘ஸ்கெட்ச்பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்கக் காலதாமதமானதால் இத்தகைய முடிவை எடுத்தாரா அல்லது ஆத்திரத்தின் உச்சியில் இச்செயலில் ஈடுபட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.