அமெரிக்காவில் பல ஆண்டுகள் பணியாற்றிவிட்டு தாயகம் திரும்பும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், காக்னிசன்ட் நிறுவனத்தில் 7 ஆண்டுகள் பணியாற்றிய அதிதி திவேதி பகிர்ந்துள்ள அனுபவம் இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அமெரிக்காவின் ஓஹியோ பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்று, அங்கேயே செட்டில் ஆன அதிதி, 2024-ன் தொடக்கத்தில் இந்தியா திரும்பினார்.
தற்போது டெல்லி NCR பகுதியில் வசித்து வரும் அவர், அமெரிக்க வாழ்க்கைக்கும் இந்திய வாழ்க்கைக்கும் உள்ள பெரிய வித்தியாசத்தை உடைத்துப் பேசியுள்ளார். “அமெரிக்காவில் இருந்தபோது விசா சிக்கல் வந்துவிடுமோ என்ற பயத்திலேயே இரவு பகலாக உழைத்தேன். ஆனால் இந்தியா வந்த பிறகு எனது முன்னுரிமைகள் மாறிவிட்டன.
https://www.threads.com/@aditi_dwivedi_1188/post/DXJNA2boPva?xmt=AQF0bEuHDq9Y_Zt8q4YoY7OzJFeZq_lQR3Qqx35EQKpSBQ
இப்போது எனக்கு வேலை-வாழ்க்கை சமநிலை தான் முக்கியம்” என அவர் தெரிவித்துள்ளார். அதே சமயம், அமெரிக்காவில் வாங்கிய சம்பளத்தோடு ஒப்பிடும்போது, இந்தியாவில் வாங்கும் சம்பளம் வெறும் ‘பாக்கெட் மணி’ போலத்தான் இருக்கிறது என்றும் அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
சரியான வேலை கிடைப்பதில் சில சவால்கள் இருந்தாலும், தனது இந்த மாற்றத்தை அவர் மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்திய பணிச் சூழலில் உள்ள ‘டாக்ஸிக்’ கலாச்சாரம் குறித்து சிலர் கமெண்ட் செய்தாலும், அதிதியின் இந்த ‘நிம்மதியான’ முடிவு பலரையும் யோசிக்க வைத்துள்ளது.
