தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எங்கே சென்றாலும், அவருக்குப் பாதுகாப்பாக நிழல் போலப் பின்தொடரும் நயீம் மூசா, தற்போது இணையதளங்களில் பேசுபொருளாகியுள்ளார். விஜய்யின் தனிப்பட்ட பாதுகாவலராக அறியப்படும் இவர், வெறும் ‘பாடிகார்ட்’ மட்டுமல்ல, விஜய்யின் மீது மிகுந்த அக்கறை கொண்ட ஒரு சிறந்த நண்பர் என்பதை நேற்றைய பொதுக்கூட்டம் நிரூபித்துள்ளது. விஜய் தனது வாகனத்திலிருந்து கீழே இறங்கும் போது, அவரது தலையில் ஏதோ விழுந்திருப்பதை கவனித்த நயீம் மூசா, அதை மிக அன்போடு தட்டிவிட்ட காட்சி அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தது.
வெறும் BODYGUARD இல்ல BEST FRIEND – உச்சி வெயிலையும் நிழலான நட்பு
| Vijay BodyQuard | Viral Video | Tvk Vijay |#vijaybodyquard #viralvideo #tvkvijay pic.twitter.com/QlHhPAFNdr— Galatta Media (@galattadotcom) April 18, 2026
இந்தச் சிறிய ஆனால் அன்பான செயல் அடங்கிய வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. “இவர் வெறும் பாதுகாப்பாளர் மட்டும் அல்ல, விஜய்க்கு ஒரு கேரிங்கான பெஸ்ட் பிரண்ட்” என ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர். விஜய்யின் ஒவ்வொரு அசைவையும் கவனமாகப் பார்த்துக்கொள்ளும் நயீம் மூசாவின் இந்தச் செயல், TVK தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், பாராட்டுகளையும் குவித்து வருகிறது.
