திமுக சார்பில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களைக் காண்பதற்காக, பொதுமக்கள் உற்சாகத்துடன் திரண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த பெற்றோர் ஒருவர், தங்களது பச்சிளம் பெண் குழந்தையை அவரிடம் நீட்டி ஆசி கேட்டனர். குழந்தையைக் கையில் ஏந்திய உதயநிதி, சுட்டெரிக்கும் வெயில் குழந்தையின் முகத்தில் படுவதைக் கண்டு உடனடியாக அங்கிருந்த ஒரு துண்டை வாங்கி, குழந்தையின் தலைக்கு நிழலாகப் போர்த்திப் பாதுகாத்தது அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
பாசமுள்ள தலைவன் உதயநிதி – வெயில் பட்ட அடுத்த நொடியே உதயநிதி செஞ்ச செயல்#udhayanidhi #udhay #Emotional #Viral #trending pic.twitter.com/7CBWcYFnCP
— Galatta Media (@galattadotcom) April 18, 2026
இதனைத் தொடர்ந்து, குழந்தைக்குப் பெயர் சூட்டுமாறு பெற்றோர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, அவர்களின் பெயர்களைக் கேட்டறிந்த உதயநிதி ஸ்டாலின், அந்தக் குழந்தைக்கு ‘கயல்விழி’ என அழகிய தமிழ்ப் பெயரைச் சூட்டினார். கொளுத்தும் வெயிலிலும் குழந்தையின் நலனில் அக்கறை காட்டிய அமைச்சரின் இந்த மனிதநேயச் செயல் குறித்த காணொளி, தற்போது சமூக வலைதளங்களில் “பாசக்கார அமைச்சர்” என்ற பெயரில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
