தென்கொரியாவில் உள்ள ஒரு நீர்வாழ் அருங்காட்சியகத்தில் (Aquarium) எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் இதயங்களை வென்று வருகிறது.
அங்கு வேலை முடிந்து அருங்காட்சியகம் மூடப்பட்ட பிறகு, அங்கிருக்கும் குட்டி நீர் நாய்கள் (Otters) காட்டும் புத்திசாலித்தனம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
韩国某水族馆,下班了,聪明伶俐的水獭宝宝帮爷爷收拾玩具,爷爷拿出了冰块奖励给它们冰块。 pic.twitter.com/wKzAvC5igQ
— Luckylab_Vicky (@Vicky22955256) April 18, 2026
அங்கிருக்கும் பராமரிப்பாளர் தாத்தாவுக்கு உதவியாக, சிதறிக் கிடக்கும் பொம்மைகளை ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுத்து அந்தச் சுட்டீஸ்கள் மிக நேர்த்தியாக அடுக்கி வைக்கின்றன.
இவர்களின் இந்தச் சமத்துப் பிள்ளைத் தனத்தைப் பாராட்டும் விதமாக, அந்தத் தாத்தா அவர்களுக்குப் பிடித்தமான ஐஸ் கட்டிகளைப் பரிசாக வழங்குகிறார்.
பொம்மைகளை அடுக்கி வைத்துவிட்டு, கூலியாக ஐஸ் கட்டிகளை வாங்கி மகிழ்ச்சியுடன் அந்த நீர் நாய்கள் விளையாடும் காட்சி தற்போது செம வைரலாகி வருகிறது.
