பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பொதுமக்களை முகம் சுளிக்க வைக்கும் வகையிலான ஒரு மோசமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

அங்குள்ள பரபரப்பான சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர், அவ்வழியாக கார்களில் செல்லும் பெண்களைப் பார்த்து அநாகரீகமான முறையில் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கையால் பைக்கை ஓட்டிக்கொண்டே, அவர் செய்த அந்த அருவருப்பான செயல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், “பொது இடத்தில் இப்படியொரு கீழ்த்தரமான செயலா?” என கொந்தளித்து வருவதுடன், அந்த நபரை உடனடியாக கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என அந்நாட்டு காவல்துறைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். சுமார் 1.8 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.