முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் விஜய் வைக்கும் விமர்சனங்களுக்கு ஏன் பதில் சொல்லாமல் மௌனம் காக்கிறார் என்பதற்கான சுவாரஸ்யமான பின்னணியை நடிகை ஆர்த்தி விளக்கியுள்ளார். 75 ஆண்டுகால அரசியல் பாரம்பரியம் கொண்ட ஸ்டாலினுக்கு விஜய் மீது ஒரு தனிப்பட்ட சகோதரப் பாசம் இருப்பதாகவும், அதனால்தான் அவரை ஒரு குழந்தையாகப் பாவித்து எதற்கும் பதில் சொல்லாமல் அமைதி காப்பதாகவும் ஆர்த்தி தெரிவித்தார். “நீ ஒரு குழந்தை, உனக்குத் தெரிந்ததைச் சொல்லிக்கொள்” என்று ஒரு பெரிய மனதோடு ஸ்டாலின் விஜய்யை விட்டுவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

​அரசியலில் இப்போதுதான் காலடி எடுத்து வைத்துள்ள விஜய்யிடம் போய்ப் போட்டியிட முடியாது என்ற முதலமைச்சரின் பெருந்தன்மையே இந்த மௌனத்திற்குக் காரணம் என ஆர்த்தி புகழாரம் சூட்டினார். அனுபவத்திற்கும் பக்குவத்திற்கும் சான்றாக ஸ்டாலின் விளங்குவதாகவும், அரசியலில் ஊறிப்போன ஒரு தலைவரிடம் விஜய்யின் பேச்சுகள் எடுபடாது என்பதையும் ஆர்த்தி தனது உரையில் மிகத் தெளிவாகத் தன்பாணியில் விளக்கியுள்ளார்.