தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஏப். 18) மேற்கொள்ளவிருந்த வீடு வீடாகச் செல்லும் ரோடு ஷோ மற்றும் வாக்குச் சேகரிப்புப் பயணம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
நேற்று பெரம்பூர் ரயில்வே பணிமனைக்குத் திடீர் வருகை தந்து ஊழியர்களை உற்சாகப்படுத்திய விஜய், இன்று தொகுதி முழுவதும் தீவிரப் பரப்புரையில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவர் குறிப்பிட்ட நேரத்தில் மற்றும் வழித்தடத்தில் பயணம் மேற்கொள்ளக் காவல்துறை உரிய அனுமதி அளிக்காததே இந்த ரத்து நடவடிக்கைக்குக் காரணம் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பூரில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார் தலைவர் விஜய்…
பாக்கியசாலிகள் பெரம்பூர் தொகுதி மக்கள் 🥹🥹 pic.twitter.com/I5p3txkcqQ
— Sivasakthi TVK 🇪🇦 (@Sivasak71673789) April 17, 2026
“>
விஜய்யின் வருகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பெரம்பூரில் திரண்டு வந்த நிலையில், கடைசி நேரத்தில் பரப்புரை ரத்து செய்யப்பட்ட அறிவிப்பு அவர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
