இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி, ஜெர்மன் இன்ஃப்ளூயன்சர் லிஸ்லாஸ் (LizLaz) என்பவரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ‘LIKE’ செய்தது தற்போது இணையத்தில் விவாதப் பொருளாகியுள்ளது.
ஏற்கனவே நடிகை அவனீத் கவுரின் புகைப்படத்திற்கு இதேபோல் கோலி லைக் செய்தபோது, அது ‘அல்காரிதம்’ தவறு என்று விளக்கம் அளித்திருந்தார். தற்போது மீண்டும் ஒரு வெளிநாட்டு மாடலின் புகைப்படத்திற்கு அவர் லைக் செய்துள்ளதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வரும் நிலையில், பாலிவுட் நடிகை அமீஷா படேல் கோலிக்கு அதிரடியாக ஆதரவு தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
“>
இதுகுறித்து மும்பையில் பேசிய அமீஷா படேல், “யாரோ ஒருவரின் புகைப்படத்தை லைக் செய்வது ஒன்றும் பாவம் கிடையாது. அது அவருடைய தனிப்பட்ட விருப்பம்; அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கம். இதில் மற்றவர்கள் தலையிடத் தேவையில்லை. ஒருவரைப் பாராட்டுவது தவறல்ல, ஆனால் மற்றவர்களைத் தேவையில்லாமல் ட்ரோல் செய்வதுதான் உண்மையான பாவம்” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி தற்போது ஐபிஎல் 2026 தொடரில் ஆரஞ்சு கேப் (Orange Cap) வெல்லும் முனைப்பில் சிறப்பாக விளையாடி வரும் நிலையில், மைதானத்திற்கு வெளியேயும் அவர் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன.
