ஐபிஎல் 2026 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது, மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனது கோபத்தை வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வழக்கமாக மிகவும் அமைதியாகக் காணப்படும் பும்ரா, தனது கடைசி ஓவரை வீசி முடித்த பிறகு மிகுந்த விரக்தியுடன் கத்தியதுடன், தனது ‘ரன்-அப் மார்க்கரை’ ஆத்திரத்தில் தூக்கி எறிந்தார்.
இந்த சீசனில் ஆடிய ஐந்து போட்டிகளிலும் பும்ரா ஒரு விக்கெட் கூட எடுக்காதது, அவர் மீதும் மும்பை அணி நிர்வாகத்தின் மீதும் கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கில் தோல்வியடைந்து மிகவும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
குறிப்பாக, அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமான பும்ரா, வழக்கத்திற்கு மாறாக அதிக ரன்களை விட்டுக்கொடுப்பதும் விக்கெட் எடுக்கத் தடுமாறுவதும் அணிக்கு பெரும் கவலையை அளித்துள்ளது.
Jasprit Bumrah looked visibly frustrated, kicking the ground and even picking up his run-up marker and throwing it away in anger after going wicketless in his 4 overs against RCB.
Meanwhile, some people are calling him a “snake,” but in reality, Bumrah is just desperate for a… pic.twitter.com/zxSGQg9NCE
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) April 17, 2026
“>
இந்திய தேசிய அணிக்காகச் சிறப்பாகச் செயல்பட்டு வந்த பும்ரா, ஐபிஎல் தொடரில் தனது பழைய ஃபார்முக்குத் திரும்ப முடியாமல் தவிப்பது அவரது செய்கையிலேயே தெரிகிறது. மீதமுள்ள போட்டிகளில் அவர் சிறப்பாகச் செயல்படுவார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்துள்ளனர்.
