தமிழக சட்டமன்றத் தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சேலத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட ரோடு ஷோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் இணைந்து வாக்குச் சேகரித்தது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த ரோடு ஷோவின் போது முதலமைச்சருடன் இணைந்து நடந்து சென்ற அனுபவம் குறித்து பிரேமலதா விஜயகாந்த் மிகவும் உருக்கமாகப் பேசியுள்ளார். “இன்றுதான் முதல்முறையாக அண்ணனுடன் (ஸ்டாலின்) நான் இணைந்து நடந்து சென்றேன்; அவர் இவ்வளவு சுறுசுறுப்பாக இருப்பதற்கான ரகசியம் இன்றுதான் எனக்குப் புரிந்தது” என்று அவர் நெகிழ்ந்து போய்க் குறிப்பிட்டார்.
மேலும், ஒரு பெண்ணுக்கான மரியாதையை உணர்ந்து ஒவ்வொரு நொடியும் தன்னை மிகுந்த பாதுகாப்புடனும், கண்ணியத்துடனும் அவர் அழைத்துச் சென்ற விதத்தைக் கண்டு வியந்து போனதாகத் தெரிவித்தார்.
இன்னைக்கு தான் முதன் முதலாக அண்ணுடன் நான் நடந்து சென்றேன்..! அவர் இவ்வளவு தூரம் சுறுசுறுப்பாக இருப்பதற்கான காரணம் எனக்கு இன்றைக்கு தான் புரிந்தது.. ஒரு பெண்ணுக்காக மரியாதையை உணர்ந்து ஒவ்வொரு நொடியும் என்னை பாதுகாப்பாக அழைத்து வந்தார்.. நெகிழ்ந்து போய் பேசிய பிரேமலதா.. கமல்… pic.twitter.com/aa5O1zOmod
— Polimer News (@polimernews) April 15, 2026
“>
பிரேமலதா இவ்வாறு அண்ணன் – தங்கை பாசத்தைப் பொழிந்தபோது, அருகில் இருந்த கமல்ஹாசன் புன்னகையுடன் அதனை ரசித்து ஆமோதிக்கும் விதமாக ரியாக்ஷன் கொடுத்தது அங்கிருந்த தொண்டர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
