இணையத்தில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, மனிதாபிமானம் இன்னும் உயிரோடு இருப்பதை உணர்த்தி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், மதிய உணவு இடைவேளையில் ஆசிரியர் ஒருவர் வகுப்பறையைச் சுற்றி வரும்போது, ஒரு மாணவன் தனது உணவாக வெறும் சப்பாத்தியையும் சர்க்கரையையும் வைத்திருப்பதைக் காண்கிறார்.

அந்தச் சூழலில் மாணவன் கூச்சமோ அல்லது தாழ்வு மனப்பான்மையோ அடைந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்ட அந்த ஆசிரியை, எவ்வித தேவையற்ற கேள்விகளோ அல்லது பரிதாபமோ காட்டாமல், மிகவும் இயல்பாகவும் அன்பாகவும் பேசி அந்த மாணவனை உணவு உண்ண ஊக்குவிக்கிறார்.

மாணவர்களின் மென்மையான மனதைக் காயப்படுத்தாமல், மற்ற மாணவர்களுக்கு முன்னால் அவரைச் சங்கடப்பட விடாமல் தடுத்த அந்த ஆசிரியையின் பக்குவமான செயல், ஒரு சிறந்த ஆசிரியருக்கான இலக்கணத்தைச் சொல்லிக் கொடுத்துள்ளது. இந்த வீடியோவிற்கு இணையவாசிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஆயிரக்கணக்கானோர் இந்த ஆசிரியையை “அற்புதமான ஆசிரியை” என்றும், பாடங்களை விட மதிப்பீடுகளைக் கற்பிப்பவர் என்றும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக, இந்த வீடியோவைப் பார்த்த ஏஐ இன்ஜினியர் ஒருவர், “நானும் சிறுவயதில் இதேபோன்ற உணவைத்தான் உண்டு வளர்ந்தேன், இன்று நல்ல நிலையில் இருந்தாலும் இந்த வீடியோ என்னைக் கண்கலங்க வைத்துவிட்டது” எனப் பதிவிட்டுள்ள கமெண்ட் பலரையும் உலுக்கியுள்ளது.